இதுவே எனது இறுதி இருப்பிடம் இதிலிருந்து என்னால் ஒரு அடிகூட இனி நகரமுடியாது.
தலைவர் உறுதியாக கூறிவிட்டார்.
பெரும் ஊடறுப்பு தாக்குதலுக்கு தயாராக இருந்த அனைத்து அணிகளும் தயார்நிலையில் விடப்பட்டுவிட்டன.
தலைவரின் இருப்பிடத்தை அண்மித்தே அனைத்து தளபதிகளது கட்டளை நிலையங்களும் போடப்பட்டிருந்தது.
உள்ளே நகர்ந்த அணியின் இறுதிவேவுத் தகவலுக்காக காத்திருந்தவேளை அது.
தீடீரென எதிர்பாராத விதமாக இராணுவம் முன்னேற்றத்தை மேற்கொண்டது.எங்கோ தகவல் கசிவு ஏற்பட்டதை விளங்கிக்கொண்டோம்.
இராணுவத்தின் முன்னேற்றம் எடுத்த எடுப்பிலே தலைவரின் இருப்பிடத்திற்கு நேரே தொடங்கப்பட்டதுதான் தாக்குதலின் தீவிரத்தை அதிகரித்திருந்தது.
தலைவர் இருந்த இடத்தைக் கடந்து இராணுவம் ஊடறுத்துவிட்டது.
நச்சுக்குண்டுகளின் தாக்கத்தாலும் எறிகணைகளின் சிதறல்களாலும் காயத்திற்குள்ளான போராளிகள் சமராட முடியாது மயங்கி விழுந்தனர்.
எங்களுக்கு உடம்பெல்லாம் எரிகாயமாக இருக்கிறது மூச்சுவிட மூக்கெல்லாம் எரியிது கண்ணால் பார்க்க முடியாதிருக்கிறது.உடனடியாக உதவிக்கு வாங்கோ.
தலைவரின் பாதுகாப்பு அணியின் வோக்கி......கட்டளையிட்டு அடங்கியது.
ராங்கோ வண்....ராங்கோ வண்.
லீமா சேரா......!
பலமுறை அழைத்தும் தொடர்பில்லை.
ரூ எய்ற்.....ரூ எய்ற்.....
பப்பா நவம்பர்....!
கடாபி அண்ணை எடுத்தார்.
நான் கிட்ட போய்ட்டேன்.ஆனால் அடி பின்னுக்கு இருந்தும் வருகிது.box பண்ணிற்றான் என நினைக்கிறேன்.
அந்தப்பக்கம் மணியின்ர பெடியள்தான்
வெளியால உடைக்கிறதைவிட உள்ளால உடைக்கிறதுதான் சரி.இன்னும் ஆள் உள்ளுக்கதான்......!
ராங்கோவின் கட்டளை இறுக்கமாக கிடைத்தது.
தலைவரைச்சுற்றி இராணுவம் போட்ட முற்றுகை box ற்குள் ஒரு சிறிய பாதுகாப்பு box எமது அணிகளால் போடப்பட்டது.இப்பொழுது அந்த box க்குள் இருந்து,நகரும் box ஆக களமுனை மாறியது.
சாரங்களை கிழித்து முகங்களில் இறுக்கமாக கட்டியபடி ஒவ்வொருவரது சண்டை அணிகளும் தலைவரின் இருப்பிடத்தை நோக்கிப் பாய்ந்தது.
வெளியில் இருந்து மூன்று பக்கங்களால் எமது box ஐ நோக்கி எமது ஏனைய அணிகள் நகர்ந்து இராணுவத் தடுப்பை உடைத்து உள்நுழைந்து பாதுகாப்பாக தலைவரை மீட்டெடுத்தது.
ஆனந்தபுரத்தைவிட்டு வெளியேற தலைவர் மறுத்தபோதும் அவரது கட்டளையை அந்தச்சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொள்ளாது ஒருவாறு தட்டுத்தடுமாறி பலருடைய வேண்டுதல்களின் பின்னர் முழு விருப்பின்றி தலைவர் சம்மதிக்க
ஆனந்தபுரத்திலிருந்து தலைவரை பாதுகாப்பாக அனுப்பிவைத்தன அணிகள்.
தொடர்ந்துவந்த நாட்கள்.....உள்ளே அகப்பட்ட இராசயனக் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான போராளிகளை மீட்பதற்கான களமாகவே விரிந்தது.இப்போது இராணுவத்தின் தாக்குதல் அடங்கிவிட்டது கொல்லப்பட்ட இராணுவத்தின் உடல்களைக் கடந்து சண்டையணிகள் பழைய நிலைகளுக்குச் சென்று விட்டது.நூற்றுக்கணக்கான
இராணுவத்தின் உடலங்கள் சிதறிக்கிடந்தது.பின்வாங்கிய இராணுவம் சிறிது நேரத்தில் பலமான விமானக்குண்டுவீச்சுகளை மேற்கொண்டது.மீண்டும் போராளிகள் இராசயனக்குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகினர்.இருபது தடவைக்கு மேலாக தொடர் விமானக் குண்டுத்தாக்குதல்களையும் அதேவேளை தொடர் எறிகணைத்தாக்குதலையும் சரமாரியாக மேற்கொண்ட சிங்களப்படை இராசயன முகக்கவசங்களுடன் முன்னேறியது.
மயக்கத்துடனும்கூட போராளிகள் துப்பாக்கிகளைக் கைவிடாது சமராடினர்.
எதிரியிடம் எமது ஆட்லறிகள் பிடிபட்டுவிடக்கூடாதென்பதற்காக அதனை குண்டுவைத்து அழிப்பதில்கூட தம்மை வெடிமருந்தோடு அழித்தனர் சில போராளிகள்.ஊடறப்புக்களில் ஈடுபட்டபடி மயங்கிவிழுந்துகொண்டிருந்தனர்.
எல்லோருடைய வோக்கிகளும் கட்டளைகளைக் கொடுத்தபடியே ஆனாலும் வெளியிலிருந்து உதவிக்கு அணிகள் அவசர அவசரமாக அப்பொழுதுதான் அனுப்பப்பட்டுகொண்டிருந்தது.
களச்சண்டைகள்
கைகலப்புச்சண்டையாக மாறிப்போக
போராளிகள் இராணுவத்தோடு நேரடியாகவே மோதும் நிலை உருவானது.
வெளியிலிருந்து அணிகள் சென்று உள்நுழைந்து சண்டையை தீவிரப்படுத்தியபோதும்.இராசயனத் தாக்குதலுக்கு உள்ளான அணிகள் அனைத்துமே செயலிழந்துபோய்விட்டன.
இன்னொரு பக்க முன்னரங்கை பலவீனப்படுத்தி அடுத்த பக்கத்தை பலப்படுத்துவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை.
04/04/2009 விடியாத நாளாக இருளாகிப்போனது.
என்றோ ஒருநாள் ஆனந்தபுரம் மீண்டும் விடியும் எனும் நம்பிக்கை விதைத்து உறுதிகொள்வோம்.
நன்றி
‘விடுதலைக்குரல்’
© தமிழர் நினைவேந்தல் அகவம் - சுவிஸ் 2021 - 2024 | All Rights Reserved . Powered By Sanishsoft