mobileicons

தமிழர் நினைவேந்தல் அகவம் -சுவிஸ்

Tamilar Rememberance Foundation

தமிழர் நினைவேந்தல் அகவம் - 2020

அன்புடன் வணக்கம்!

“நாங்கள் ஒரு உன்னத இலட்சியத்திற்காகப் போராடி
வருகின்றோம். அந்த இலட்சியத்திற்காக உழைப்பதும்,
வாழ்வதும் எங்களுக்குப் பூரண ஆத்ம நிறைவைத் தருகின்றது.”

தமிழர் நினைவேந்தல் அகவத்தின்தோற்றம் :

சுவிஸ் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, இன்று போல் என்றென்றும் தமிழர்களின் வாழ்விற்காய் தமது இன்னுயிர்களைத் தியாகம்செய்த மாவீரர்களின் நினைவினை சுவிஸ் மண்ணில் தொடர்ந்து பேணல், அவர்களின் நினைவு சுமந்த வணக்க நிகழ்வுகளை ஒழுங்கமைத்தல், தாயகத்தில் வறுமைநிலையில் வாழும் மாவீரர்களின் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ளல் போன்ற மேம்பட்ட திட்டமிடல்களுடன் சட்டபூர்வமாகக் பதிவு செய்யப்பட்டு 2010 நவம்பர் 27 தேசிய மாவீரர்நாள் அன்று உத்தியோகபூர்வமான அறிமுகத்துடன் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் உருவாகக்ப்பட்டது.

நிர்வாகம்:

சதலைவர், செயலாளர் , பொருளாளர் ஆகியோரின் ஆலோசனைகளுடன் மாநிலரீதியான தொடர்பாளர்களைக் கொண்டது.

அங்கத்துவத்தின் நோக்கம்:

தாயக விடுதலைக்குப் போராடி வருகின்ற தமிழினம், தங்களின் இலட்சியத்தை வென்றெடுக்கும் வரை எவ்வித இடையூறுமின்றி அதற்கான செயற்பாடுகளை புலம்பெயர் மண்ணில் மேற்கொள்வதற்கும் , புலம் பெயர் நாடுகளில் ஒரு அமைப்பு எத்தகைய சட்டச்சிக்கல்களுக்கும் உட்படாது தொடர்ந்து செயற்படுவதற்கும் கட்டணம் செலுத்தப்பட்ட அங்கத்தவர்களின் அதிகூடிய என்ணிக்கை இன்றியமையாத ஒன்றாகும்.

அந்தவகையில், தங்களால் செலுத்தப்படுகின்ற பணம் தாயகத்தில் எதிர்கால வாழ்விற்காய் அல்லலுறும் மாவீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கு உரமாகி வளப்படுத்துவதற்கே செலவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் . ஆண்டுதோறும் எமது மாநிலத்தொடர்பாளர்கள் ஊடாகவோ அல்லது எமது தபாற்கணக்கு ஊடாகவோ தங்களின் அங்கத்துவத்தைப் புதுப்பித்துக் கொள்வீர்கள் என்று உறுதியாக நம்புகின்றோம்.

உங்கள் ஒவ்வொருவரினதும் ஆக்கபூர்வமான கருத்துகக்ளை trfswiss@gmail.com என்ற எமது மின்னஞ்சல் ஊடாக அறியத்தாருங்கள். உங்களின் புரிந்துணர்வும், ஆதரவும் அகவத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்கும்.