இந்த உலகிற்கு எம் தலைவன் புரியாத புதிர்

IN நிகழ்வுகள் VIEWS 101

image
Posted On : 25 January 2021

SHARE THIS :

சூரியக்கதிர் – 01, 02, 03 நடவடிக்கைகள் புலிகள் இயக்கத்தின் போரிடும் திறனை நசுக்கிவிட்டான என்பது, சிங்கள அரடினது கருத்துமட்டுமல்ல; பெரும்பாலான உலக இராணுவ – அரசியல் ஆய்வாளர்களும் அவ்வாறே கருதினர். பாரிய முகாம் தகர்ப்புகளை புலிகளால் இனிமேல் நடாத்த முடியாது என்றும், அராசுக்கு தலையிடியைக் கொடுக்கும் வகையில் சிறு சிறு தாக்குதல்களை மட்டுமே புலிகளால் நடாத்த முடியும் என்றும், அவர்கள் கருத்துக் கூறியிருந்தனர். சுருக்காமாகச் சொன்னால், தீவிரம் குறைந்த ஒரு போர்முறையை (Low inten sive warfare) மேற்கொள்ளவே புலிகளின் தற்போதைய இராணுவ பலம் இடங்கொடுக்கும் என்று, பெரும்பாலான ஆய்வாளர்கள் ஆருடம் கூறியிருந்தனர். ஆனால், இத்தகைய படையியல் கணிப்பீடுகள் மற்றும் இராணுவ அபிப்பிராயங்கள் அனைத்தையும், ஓயாத அலைகள் மூழ்கடித்துவிட்டது. தென்மராட்சி – வடமராட்சியிலிருந்து பொரீடாது பின்வாங்கிய புலிகளின் செயலை புரிந்துகொள்ள முடியாது திண்டாடிய இராணுவ உலகம், முல்லைத்தீவு படைத்தளத்தைப் புலிகள் கைப்பற்றிவிட்டனர் என்ற செய்தி வெளியானவுடனும், புலிகள் இயக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாது விழித்தனர். மொத்தத்தில், இராணுவ உலகிற்கு அன்றும் – இன்றும் புலிகள் இயக்கம் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. தலைவர் பிரபாகரனின் இராணுவச் செயற்பாடுகளில் உள்ள