விடுதலை போராளி என்ற தளத்தில் இருந்து ஒரு இனத்திற்காக ஒரு தலைவன் உருவாகின்றபோது அந்த தலைவனை எந்த வல்லாதிக்க சக்திகளாலும் நேர் வழியில் வீழ்த்த முடியாமல் போகின்றமைக்கு காரணம் அந்த தலைவனின் ஒழுக்கம். அவ்வாறு ஒழுக்கமிக்க தலைவன் இந்த உலகில் உண்டென்றால் அது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களாக மட்டுமாகத்தான் இருக்க முடியும். அன்று நடந்த ஒரு சுவார்சிய நிகழ்வு பற்றி போர்போம். அன்றைய சமாதன கலகட்டத்தில் (எந்த வருடம் என்பது எனக்கு நினைவில் இல்லை) சர்வதேச ஊடகத்துறையான அல்ஜீரா ஊடகத்தில் இருந்து முதன் முறையாக ஒரு ஊடகவியலாளர் தலைவர் பிரபாகரன் அவர்களை பேட்டி எடுப்பதற்காக கிளிநொச்சி வந்திருந்தார். கிளிநொச்சி வந்திருந்த அந்த ஊடகவியலாளர் மனதில் ஆயுத குழுவின் தலைவன் என்றால் வாயில் புகையிலையுடனும் ஆணவ திமிருடனும் தான் வருவார் அவர் சொல்வதுதான் சரி என்றும் கூறுவார் பேட்டி எடுப்பதற்கு தயாரானார். இதற்கிடையில் ஊடகவியளாலருக்கும் ஒளிப்பட பதிவாளருக்கும் அவர்களின் கலாச்சார முறையிலையே உணவு பரிமாறப்பட்டது இது அவர்களை ஆச்சரியப்பட வைத்தது. இந்நிலையில் வாகனத்தில் இருந்து தலைவர் பிரபாகரன் இறங்கியதை கண்ட அந்த ஊடகவியலாளருக்கு மேலும் ஆச்சரியம் அந்த ஊடகவியலாளர் நினைத்ததற்கு எதிர்மறையாக தலைவர் இருந்தார். குறித்த
© தமிழர் நினைவேந்தல் அகவம் - சுவிஸ் 2021 - 2024 | All Rights Reserved . Powered By Sanishsoft