mobileicons

தமிழர் நினைவேந்தல் அகவம் -சுவிஸ்

Tamilar Rememberance Foundation

24th February 2020

கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல....

எல்லாவிதமான குரூருங்களில் இது மிகவும் ஈவிரக்கம் அற்ற வெட்டு எனக் குறிப்பிடுவர். கட்டுறுதி உள்ள உடல். கண்ணிலே நல்ல குணம். புன்னகை தவழும் முக அழகு. சு.பதமிழ்செல்வன் கூறியதுபோல் எங்கள் செல்லப்பிள்ளை. பொருவில் அன்புருவமானவன். அந்த அன்பின் வடிவத்தை காணப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள்.


நிராயுதபாணியாக வீர அபிமன்னுவாக அவன் நின்றபோது ஆயுதம் தரித்தசிங்களபேரினவாதம் தமிழ் துரோகிகளின் பெயரில் கௌசல்லியனை படுகொலைசெய்துள்ளனர்.


அன்று புலேந்திரன், குமரப்பா, பின்பு கிட்டு என்னும் சகாப்தம். இன்று கௌசல்யன். இவர்களின் மறைவுகளுக்குப் பின்னால் பலவீனமான ஈனப்பிறவிகளின் செயல்பாடுகள்எம் கண்முன்னே விரிகின்றன.


ஆயின் இவர்கள் இழப்புக்கள் எல்லாம் எதிரிகள் நினைத்ததிற்கு மாறாக தமிழ்தேசியத்தை தமிழர் தாயகக்கோட்பாட்டை மேலும் வலுப்பெறச் செய்துள்ளன என்பதேஇன்றைய யதார்த்தமாகும்.


* சி.சிவசேகரம் என்னும் கவிஞன் யாரை உள்வாங்கி எழுதினானோ நான் அறியேன் . ஆயின் அவர் குறிப்பிடும் கவிதை வரிகளான


.”…………ஆழக்கிடங்கினின்று அலைகடலின் கீழிருந்து


விலங்கின் குடல் கிழித்து வானவெளஹ கடந்து


சுட்டெரித்த சாம்பலின் , பீனிக்ஸ் பறவையென


வெட்டுண்டு கீழ் வழிந்த குருதித் துளியுயிர்த்து


சஞ்சீவி மாமலையின் காற்றுறிஞ்சி நான் வருவேன்.


அறைகின்ற சிலுவைகளில் மரித்து உயிர்த்தெழுவேன்


வானளந்து நான் வருவேன் தூண்பிளந்து நான் வருவேன்


நீ நம்ப மறுக்கின்ற கதையெல்லாம் நிசமாக்க


விடுதலையும் சமத்துவமும் முழங்குமொவ்வோர் மு~ச்சினிலும்


அடிமைத்தனத்துடனே அடக்குமுறை உள்ளவரை


மறுபடியும் மறுபடியும் மறுபடியும் நான் வருவேன்……”


என்னும் கவிக்கோலங்கள் எங்கள் கௌசல்யனுக்காகவே எழுதப்பட்டதோ?


ஆம் தமிழ் தேசியத்தின் மூச்சில், தமிழர் தாயகக்கோட்பாட்டில் அவன் சம்பவாமி


சேக்ஸ்பியர் கூறியதுபோல் …. .


”….He lives, he wakes, ’tis death is dead, not he..”


கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல.


 


2005 பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில்விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்றுமாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல்கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஆண்டுஜந்தாகின்றது . இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின்அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது.


லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக்கொண்டவன். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர்தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதைசுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. இதன்விளைவாய் இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.


மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிபெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்தஅறிவும் துடுதுடுப்பும், அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச்சிறந்த போராளியாக மெருகூட்டியது.


காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்தமுறையில் பணியாற்றிய இவன், பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின்அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறான். போர்ச் சூழலில் தமிழ்முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம்சகோதர்களுடன் நட்புறவை, இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன்அரும்பாடுபட்டான்.


காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமானநம்பிக்கை


நட்சத்திரமாக விளங்கினான்.


இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம்போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தைமுன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்யவேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை.


ஒட்டுமொத்தத்தில் அன்பு பண்பு பாசம் அடக்கம் அறிவு வீரம் விவேகம் விடுதலைஉணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன்அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம்மட்டுமல்ல தேசத்துரோகமிழைக்க முனைந்த கருணாவின் சதித்திட்டங்களை நன்குஉணர்ந்து கொண்டான். கருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின்சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி செல்கிறனர்.


தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர். கருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன்மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்துதெளிவுபடுத்தியிருந்தார்.


கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும்முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுபல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தைவலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டான்.


திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்பு பாதிப்பு அவலங்கள் எல்லாம்கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடுசெயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன்தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்தபோதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.


2005 மார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும்அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வேன் ஒன்றில் வந்து கொண்டிருந்த போதுவெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுபடைகளால் வழிமறிக்கப்பட்டுதுப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தான். இவனுடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜர் செந்தமிழன்(தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன்செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதிஎஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.


சிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்தஉடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப்படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனை வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம்மட்டுமல்ல சர்வதேசமே கலங்கிப்போனது. ஐ.நாவின் அப்போதைய செயலாளர் நாயகம்கொபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம்சகோதர்களும் வாய்விட்டு அழுதனர்.


போர் நிறுத்தம் சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப்படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்கநிகழ்வில் அமரத்துவமடைந்த தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன்முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள் தளபதிகள்போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தைஉருக்குகின்றது.


ஆனால் இன்னும் கொலையாளிகளின் கொடூரங்கள் இன்றும் அந்த வெலிக்கந்தைப்பகுதியில் தொடர்கதையாகும் வகையில் தான் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின்பணியாளர்கள் ஐவர் மிருகத்தனமாக ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுபடுகொலைசெய்யப்பட்டதுடன். மற்றும் ஐவருடன் வாகனத்தையும் இன்றுவரை காணவில்லைஎன்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியது.


* இதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள்மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்புமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு 2005 பெப்ரவரி 8ம் நாள்மரணமடைந்தார்.


இவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காகபாடுபட்டு உழைத்தார்.


இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 86ம் ஆண்டு வரை மூன்றுவருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த்தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார்.


இதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரைவேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமைவேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்றுநாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். மாவட்டத்தில் இவர் ஐந்தாவதுநாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப்பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார்.


எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக்கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டுஅவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார்.


சுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்டமக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் தமிழ்த்தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. துரோகக் கும்பலால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டது யர்களின் மத்தியில் தேசியத்தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருதுவழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார்.


இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றதுஎன்றே கூறவேண்டும்.


ஆண்டு ஜந்தாகின்றது. வெலிக்கந்தை படுகொலையின் துயரநினைவுகள் இன்னும் தாயகமக்களின் நெஞ்சை சுட்டெரிக்கிறது. அந்த சுட்டெரிப்பு தேச விடுதலையை விரைவாகவென்றெடுக்க வழிகோலும். எதை இலட்சியமாகக் கொண்டு தேசியத் தலைவரின் வழிநடத்தலில் இறுதிவரை நின்று வழிகாட்டிய கௌசல்யனின் போரியல் வாழ்வு தாயகஉறவுகளுக்கு சரித்திரமாகி விட்டது. அவனது கடந்த கால வரலாறுகளை கண்ணுற்றுஎம்மை பலப்படுத்துவோம்.


“நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின்இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமதுமாவீரர்களின் கனவை நனவாக்கும்…


-ஈழத்தில் இருந்து ந. ஈழவேந்தன்- --------------

Prev Post

Next Post

latest
29 January 2022

test

latest
latest
latest
latest
latest
latest
latest
latest
latest