தமிழீழத்தில் இன்று இராணுவ அராஜகம் தலைவிரித்தாடுகிறது. தமிழீழப் பகுதிகளில் சிங்கள ஆயுதப்படைகள் சதா குவிக்கப்படுகின்றன. நவீனகரமான ஆயுத தளபாடங்களும் புகுத்தப்படுகின்றன. கடலாலும், நிலத்தாலும் தமிழீழம் முற்றுகையிடப்பட்டிருக்கிறது. பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தமிழ் மக்கள் பயந்து வாழ்கிறார்கள். இராணுவ அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. இது தான் இன்றைய நிலை. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, விடுதலைப்போராட்டத்தை முன்னெடுப்பதாயின் ஒரு பலம் வாய்ந்த தேசியப்படை அமைப்பை நாம் கட்டியெழுப்பவேண்டும். தமிழீழ விடுதலைக்கு இன்று அத்தியாவசியமான தேவை இதுவாகும். இந்த இலக்கில் தான் எமது முழு முயற்சியும் இன்று பிரயோகிக்கப்படுகிறது. இந்த இலக்கை நாம் அடைவதற்கு வெளிநாடுகளில் வதியும் தமிழீழ தேசபக்தர்களின் உதவியும் ஒத்தாசையும் இன்றியமையாதது. இந்த வகையில் நீங்களும் எமக்கு உதவிசெய்ய முன்வரவேண்டும். எமது விடுதலை இயக்கம் ஒரு தேசிய பாதுகாப்பு நிதியை ஆரம்பித்திருக்கிறது. இது பற்றிய எனது விபரமான அறிக்கை எமது இயக்கப்பத்திரிகையில் வெளியாகியிருக்கிறது. அதனை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். இந்நிதிக்கு அமெரிக்காவிலுள்ள தமிழீழ விடுதலை விரும்புகள் தம்மாலான நிதி உதவியைச் செய்யும
© தமிழர் நினைவேந்தல் அகவம் - சுவிஸ் 2021 - 2024 | All Rights Reserved . Powered By Sanishsoft